Sunday, November 16, 2008

சுவடுகள் - VII

Symposium வேலைகள் தீவிரமாக அரங்கேறத் தொடங்கின.அனைத்து ஏற்பாடுகளும் கரனின் தலைமையில் நடக்க இருப்பதால் இதை சிறப்பாக அமைக்க எனக்கும் கோபுவுக்கும் கொஞ்சம் ஆர்வம் அதிகமாகவே இருந்தது.அன்று மாலை கல்லூரி முடிந்த நேரம் அனைவரும் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த போது கரன் "டேய் இந்த symposium நல்லா பண்ணனும் so evening சும்மா என்ன பண்ணலாம்னு discuss பண்ணலாம், எல்லாம் beach க்கு வந்துடுங்க, நந்தா,செல்வா,கார்த்தி நீங்க எல்லாம் நேரா அங்க வந்துடங்க, நாங்க மூணு பேரும் 7.30 க்கு வந்துடறோம் ok வா". ஆனால் நாங்கள் எல்லோரும் ஒன்றாய் பொழுதைக் கழிப்பதில் ஏக சந்தோசம் எனக்கு, ஏனெனில் கும்பலாக எதாவது பேசும் வேளையில் அவனவன் ஆட்களைப் பற்றி கண்டிப்பாக ஒரு வார்த்தை வரும்.அதில் கிடைக்கும் ஆனந்தமும் ஒரு தனி சுகம்தான். மாலை 7.40 க்கு சரியாக அனைவரும் சந்தித்தோம். Symposium தவிர அனைத்து விவாதங்களும் அருமையாக அரங்கேறிக் கொண்டிருந்தன. பேசிக் கொண்டிருக்கும் போதே செல்வா "டேய் மணி 9.10 ஆச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல ருக்மணில காதல் கொண்டேன் second show போட்டுருவான், எல்லாம் நல்லா இருக்குனு சொல்றானுங்க, போலாமா? " என கேட்டான். கேட்ட அடுத்த நிமிடத்தில் அனைவரும் ஒரே வரிசையில் முன் இருக்கை மீது கால் போட்டுக் கொண்டு. படம் நகர நகர அதன் கதை போகும் போக்கில் கோபு இடையே குறுக்கிட்டு "டேய் கரன் இந்த படத்தோட climax எதிர் பார்க்கறேன்டா, ஏன்னா இந்த கதையை பார்த்தா நம்ம பக்கத்துல்ல உக்கார்ந்திருக்கற ஒருத்தன் கதை மாறியே இருக்கு" என என்னை நோக்கி அவனிடம் காதைக் கடித்தான். ஒரு வழியாக படம் முடிய நாங்கள் வரும் வழியில் மீண்டும் கோபு " இங்க பாருடா கதிர் உன் கதைய அப்படியே copy அடிச்சு அந்த புது director படம் எடுத்துருக்கான். ஆனா அந்த climax கததாண்டி உனக்கும்" என சிரித்தான். கரன் குறுக்கிட்டு "டேய் வாய மூடுடா அவன் இப்போவாது திருந்தட்டும்" என்றான்.


ஆனால் நான் இதைப் பற்றி ஏதும் நினைக்கமால் Beach ல் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கொஞ்சம் நழுவி யாருக்கும் தெரியாமல் நான் லாவண்யாவுக்கு வாங்கிய பிறந்த நாள் பரிசு பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஆம் மறுநாள் லாவண்யாவின் பிறந்த நாள். அவள் என்னதான் என்னைவிட்டு தள்ளி இருந்தாலும் அவள் பிறந்தநாளை நான் விட்டுத்தள்ள விரும்பவில்லை. மறுநாள் நான் வாசலியே வேடிக்கை பார்த்த நேரத்தில் கணப் பொழுதில் ஒரு மஞ்சள் சுடிதாரில் மங்களகரமாய் வந்தமர்ந்தாள் லாவண்யா. அன்று எவ்வளவு எண்ணியும் என்னால் மதியம் வரை பேச முடியவில்லை. கரன் "என்னடா அதுக்கு பொறந்தநாள் நீ என்ன வெறும் கையோட வந்துட்ட" உடனே கோபு என் bag ல் இருந்த அந்த gift ஐ ஆராய்ந்து எடுத்து "டேய் கதிர் இது என்னடா", நான் "அது வந்து அது வந்து சும்மா ஒரு gift நேத்தே வாங்கிட்டேன், அதான் ஒரு xerox எடுக்கனம்னு நடுல நேத்து போனேன்ல அப்போ" என பல்லை இளித்துக் கொண்டே கூற, "டேய் கரன் இவன பார்த்தியாடா கண்டிப்பா இவன் ஒரு கள்ளன்டா நாம ரொம்ப ஜாக்கிரதயா இருக்கணும் அப்பறம் இவன சரியா follow பண்ணனும்... " என நகைத்தான். ஒரு வழியாக லாவண்யாவை சந்திக்க ஒரு free period கிடைத்தது அன்று. வகுப்பில் யாருமில்லா நேரத்தில் அவளே என் இடத்திற்கு வந்தாள். "Happy Birthday லாவண்யா ஒரு சின்ன gift வாங்கனேன் பிடிச்சிருக்கா" என நான் கேட்க அவளின் Thanks கண்களில் தெரிந்தது ஒரு புன்னைகையோடு .


" கதிர் evenig canteen க்கு வா ஒரு சின்ன treat..அப்பறம் தனிய வராதா உன்னோட ரெண்டு கூட்டாளிகளையும் கூட்டிட்டு வா நான் இப்போ hostel போயிட்டு வரேன்" என சிரித்துக் கொண்டே சென்றாள். வகுப்பை விட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் இரண்டு அடி பின்வைத்து "Thanksடா கதிர்" என்று சொல்லிவிட்டு சென்றாள். வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வானத்தில் வட்டமிடத் தொடங்கினேன்.மேலே பறந்து கொண்டிருந்த வேளையில் யாரோ இருவர் வேகமாக பிடித்து இழுப்பதுபோல் இருந்தது. "Sir class ல நீங்க மட்டும்தான் இருக்கீங்க கொஞ்சம் வேற உலகத்துக்கு வரியாடா வெண்ண கரன் அங்க வெயிட் பண்றான்" என்று மண்டையில் தட்டி கோபு என்னை எழுப்பினான். நான் அவர்களை பார்த்து "டேய் லாவண்யா canteen க்கு வர சொன்னா போலாமா" என்றதற்கு கரன் "டேய் அவங்களுக்கு எங்களலாம் வாயால கூப்பிட முடியாதா? என்ன நீ அவங்களுக்கு PA வா" எனக் கேட்க, கோபு "டேய் நாம பண்றதுக்கெல்லாம் இவ்ளோ மரியாதை கிடைக்கறத நினச்சி சந்தோஷ படுடா.. சரி கதிர் வேற யாரெல்லாம் வராங்கடா" எனக் கேட்க, "கோபு அவர்களே கொஞ்சம் மூடிட்டு வறீங்களா.. நீ யார எதிர் பார்க்கறனு எனக்கு தெரியுண்டா." என உடனே அவன் வாயை மூடினான். 4.00 மணி முதல் நாங்கள் மூவரும் காத்துக் கொண்டிருந்தோம். லாவண்யா இதோ வரேன் என்று சொல்லிவிட்டு போனவள், 6.20 வரை ஆகியும் அவளின் நிழல் கூட அந்தப் பக்கம் தெரியவில்லை. "டேய் உன்ன நம்பி வந்தோம் பாருடா இப்போ private bus ல போவ வசிட்டேயாடா... சரி விடு இது உனக்கு இன்னொரு பாடம்." என கோபுவும் கரனும் bus stop நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் என் மௌனத்தோடு. மறுநாள் வகுப்பில் காலை லாவண்யாவின் கண்கள் வந்த உடனே என்னைத் தேட ஆரம்பித்தது எனக்கு சட்டென புரிந்தது. நான் வேண்டுமென்றே அவள் கண்களில் படாமல் மதியம் வரை மறைந்தோடினேன். ஆனால் மாலை எப்படியோ என்னைத் தேடி library இருக்கும் குட்டிச்சுவர் வந்து விட்டாள். "நீ வருவன்னு எனக்கு தெரியும். அதுவும் எப்படியும் ஒரு காரணத்தோடு வருவேன்னும் தெரியும்" என கோபமாக நான் கேட்க, "கதிர் நீ என் மேல கோபமா இருக்கேன்னு தெரியும் ஆனா நேத்து நான் வராதத ஞாயப்படுத்தப் போறதில்ல. என் roommates எல்லோரும் எனக்கு hostel ல cake வெட்டி என்ன வெளியவே விடல, உள்ளத சொல்லிட்டேன் அதுக்கப்பறம் நீ கேட்கறதும் கேட்காததும் உன் இஷ்டம்" என சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். என் கால்களும் அவள் பாதை
நோக்கி ஓடியது அவள் பின்னே.

மீண்டும் நான் அவள் நட்பின் பாதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன்.

நாங்கள் எதிர்பார்த்தபடியே Symposium சிறப்பாக நிறைவுற்றது.

கல்லூரியில் அனைத்து நண்பர்களும் நல்லதொரு கம்பெனியில் வேலையை தக்க வைத்துக் கொண்ட நாட்கள் அவை. அனைவரும் வாழ்க்கையில் ஒரு படி மேலே போன நாட்கள். முடியவேக் கூடாதென எதர் பார்த்த கல்லூரியின் கடைசி நாட்கள் நெருங்கத் தொடங்கின. ஆம் இன்னும் நான்கு மாதத்தில் என் கனவு வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியும், நிஜ வாழ்க்கைக்கு ஒரு தொடர்புள்ளியும் போடப்போவதைப் புரிய ஆரம்பித்த நாட்கள்.


(தொடரும்)

அன்புடன்

கருணா

Wednesday, March 26, 2008

சுவடுகள் - VI

நண்பர்களின் ஆரவாரத்துடனும் கல்லூரி நாட்கள் செல்வதே தெரியாமல் இருந்த எனக்கு நாட்கள் வேகமாக ஓடுவதற்கு பதிலாக நகரத் தொடங்கியது லாவண்யாவின் பார்வை இல்லாமல். அனைவரும் தங்கள் project முடிவு செய்துவிட்டார்கள். எங்கள் மேலேயும் கொஞ்சம் அபார நம்பிக்கை வைத்து சகாதேவன் professor அவருடைய Ph.D work ல் எங்களுக்கு பங்களித்தார் அதையே project ஆக செய்ய சொல்லிவிட்டார். அவரிடம் project செய்வது எங்களுக்கும் கொஞ்சம் பெருமையாக இருந்தது ஏனெனில் அவரிடம் பேசுவதற்கே எங்கள் வகுப்பில் அனைவரும் யோசிப்பார்கள். அனைவருக்கும் project முடிவான பின்னே வகுப்பில் இருக்கும் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது அவரவர் project batchகளைப் பொறுத்து, என் மனதில் சிறை பூட்டப்பட்டது. லாவண்யா அதில் சற்று தூரம் செல்லத் தொடங்கினாள். எனக்கான பாதை நேர்க்கோட்டில் இல்லாதது போல் இருந்தது. நான் அதிகம் விரும்பிய lab அனைத்தும் வெறுமையை மட்டும் எனக்கு பரிசாக தந்தன. அவள் இருக்கும் காரணத்தால் என்று Lab வகுப்புகள் எப்போது வருமென்று ஆர்வமாய் எதிபார்த்திருந்த நாட்கள் எல்லாம் இன்று என்னைப் பார்த்து ஏளனமாக சிரிக்க ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டன.

ஆனால் கிடைக்கும் சிறு நேரத்திலாவது அவளிடம் பேச நினைத்துக் கொண்டிருந்தது மனது. நான் எதிர் பார்த்தது போல் ஒரு 10 நாள் கழித்து லாவண்யாவும் என்னிடம் வந்து "என்ன கதிர் முதல்ல போல பேசலனு கோச்சிக்காத சரியா, வேற batch போனதால உன்ன ஒழுங்கா கவனிக்கக் கூட முடியல, சரி உனக்கு எப்படி போகுது project... start பண்ணியாச்சா?" என அவள் கேட்டுக்கொண்டே போக எதையோ பறிகொடுத்தவன் போல அவள் வார்த்தைகளை ரொம்ப நாட்களுக்கு பிறகு கேட்கும் மகிழ்ச்சியில் நான் திளைத்துக் கொண்டிருந்தேன். "இல்ல ஏதும் strat பண்ணல, அப்படியே போய்ட்டு இருக்கு...பண்ணனும்..பார்ப்போம்" என்றேன். அவளுக்கு என் மேல் இருந்த எதோ ஒன்று குறையவில்லை என்று மனதில் கொஞ்சம் சந்தோசம் சாய்ந்தாடியது. ஆனால் அதை நிலையானது அல்ல என்று மட்டும் மனதில் கேள்விகள் புரண்டோடியது. அன்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்று தனிமையில் எதையோ எண்ணிக் கொண்டிருந்த வேளையிலே தொலைபேசி அலறியது "கதிர், நான் லாவண்யா பேசறேன் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன் என்ன சொல்ற, போன semester நீயும் என்ன எத்தனையோ தடவ கூப்பிட்ட ஆனா எனக்குத்தான் time ஒத்து வரல, நான் மட்டும் தனியா வரல ராதாவையும் கூட கூட்டிக்கிட்டு வரப்போறேன், அவ்ளோ தூரம் வரனும்தானே" என்று சொல்லி என்னை சற்று அந்தரத்தில் மிதக்க வைத்தால். எனக்கு அவள் என் வீட்டுக்கு வருகிறாள் என்று சொன்னதும் எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் உள்ளே நுழைந்த அம்மாவிடம் "மா நாளைக்கு காலைல என்ன சாப்பாடு" என்று கொஞ்சம் ஆர்வமாக கேட்டேன். "இட்லி சுடலாம்னு இருக்கேன் ஏன்டா?" என்றார்கள். "இல்லமா வேற எதாவது புதுசா செய்யலாமே" என்றேன். " சரி இடியாப்பம் செய்யட்டுமா ?" என்று சொன்ன போது அதுவும் கேரளத்து special ஆக இருந்ததால் உடனே அதையே செய்யுங்கள் என்று கூறிவிட்டேன். லாவண்யா வரும் விஷயத்தை அன்று கரன் மற்றும் கோபுவிடம் கூட சொல்ல முடியவில்லை.

காலையில் எல்லாம் தயார் ஆக இருக்க, அவள் மட்டும் காணவில்லை. மணி 10.30 ஆனது எங்கே எனக்கு ஏமாற்றத்தை தரப் போகிறாள் என்று வீட்டு வாசலில் எட்டிப் பார்த்த எனக்கு ஒரு குட்டி தேவதை என் வீதியிலே வருவது போல் தெரிந்தது. ஆம் லாவண்யா வருகையால் என் வீதியும் விழிப்படைந்து. உள்ளுக்குள்ளே ஒரு நடுக்கத்துடன் வார்த்தையில்லாமல் அவளை வரவேற்று அனைவருக்கும் அறிமுகம் செய்துவிட்டு அவள் அமர்ந்த இடத்துக்கு எதிரே அமர்ந்து உணவருந்தினேன். பின்னர் சுமார் ஒரு அறை மணி நேரம் பொழுதைக் கழித்துவிட்டு வேகமாக கிளம்பினாள். "சரி aunty நான் கிளம்பறேன், எங்க வீட்ல சாப்பிட்ட இடியாப்பம் மாதிரி செஞ்சிருந்தீங்க " என சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினாள். நான் ஆவென்று அவளையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை bus stop வரை வழி அனுப்பலாம் என்று செல்லும் வேளையில் ராதா "நான் இங்க கார்த்திய பார்க்க போறேன் லாவண்யா நீ போய்டு ஓகேவா" எனக் கூறி அங்கிருந்து கிளம்பி விட்டாள். லாவண்யா என்னிடம் தயக்கமாய் "கதிர் உனக்கு கஷ்டமில்லனா என்ன கொஞ்சம் மெயின் bus stop ல drop பண்ணிடரியா நான் அங்கேர்ந்து வேற bus பிடிச்சி போயிடறேன்" எனக் கூறினாள். உடனே அவளை என் நண்பனிடம் வாங்கி வந்த scooty ல் உட்கார வைத்துக் கொண்டு நகர்ந்தேன். ஒரு புதுவித பயம் கலந்த அனுபவம்.

வழியில் ஏதோ அவள் தொன தொனவென பேசிக் கொண்டிருக்க அவள் வார்த்தைகளை செல்லமாய் காதுகளில் வாங்கிக் கொண்டிருந்தேன். அந்த bus stop நான் எதிர் பார்த்ததைவிட சீக்கிரம் வந்தது அப்போது " கதிர் எதாவது உனக்கு urgent வேலையிருக்கா?" என்றாள். "இல்லையே என்ன சொல்லு என்ன செய்யணும்" எனக் கூறினேன். "நீ busy இல்லனா என்ன Richy Richக்கு கூப்டுகிட்டு போறியா? சும்மா உன்கூட first time வெளிய வரேன் அதான்" என்று சொல்லி முடித்த அடுத்த வினாடியில் scooty Richy Rich ice cream shop நோக்கி நகர ஆரம்பித்தது. ஒரு மெல்லிய வெளிச்சத்தில் அவள் அருகே நான் அமர்ந்திருக்க இசை எங்கேயோ கேட்பது போல் இசைத்துக் கொண்டிருந்தது என் காதுகளுக்கு மட்டும். " இந்தா கதிர் உனக்கு புடிச்சது சொல்லு அதையே இன்னிக்கு நானும் சாப்பிடறேன் சரியா" என்றவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் ஏதோ ஒன்றை சொன்னேன். அது வரும் நேரத்திற்குள் கொஞ்சம் வார்த்தைகள் பரிமாறப்பட்டது. இத்தனை முறை நண்பர்களுடன் சென்ற அந்த இடத்திற்கு இப்போது லாவண்யா உடன் சென்றது புதுமையாக இருந்தது. வந்த ice cream ஐ நான் பேச்சு வாக்கிலே வேகமாக சாப்பிட்டு முடித்து அவள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தேன்.

லாவண்யா குறுக்கிட்டு "என்ன வந்த வேலை முடிஞ்சுதா, order பண்ண, கட கடன்னு சாப்ட, இதுக்கா உன்ன இங்க கூப்டுகிட்டு வந்தேன். கொஞ்சம் பொறுமையா பேசிகிட்டே சாப்டா நல்லா இருந்திருக்கும்ல உன்கிட்ட college ல பேச முடியல அதனாலத்தான் இங்க வந்த ஆனால் நீ" என என்னைப் பார்த்து நகைத்தாள். கொஞ்சம் பொறுமையா சாப்பிட்டு இருக்கலாம் என்று அப்பறம் தோன்றியது. சற்று நேரத்தில் "கதிர் நான் கிளம்பறேன் என்ன bus stop ல விட்டுடு வா போலாம் மணி ஆகுது" என அவசரப் படுத்த, நான் "லாவண்யா இப்போ நான் ஒன்னு சொல்றேன், மணி 1 ஆகுது இந்த time ல பஸ் அதிகமா இங்கேர்ந்து இருக்காது அதுவுமில்லாம உன்ன தனியா அனுப்ப எனக்கு மனசு இல்ல அதனால நானே உன்ன college ல drop பண்ணிடறேன்" எனக் கூறி முடிப்பதற்குள் அவள் வண்டியில் அமர, பயணம் கல்லூரியில் முடிந்தது. "கதிர் I had a nice time today ரொம்ப thanks மறக்க மாட்டேன்" என சொல்லி hostel நோக்கி நடந்தாள். வரும் வழியில் ஒரு ஆயிரம் பட்டாம் பூச்சிகளுடன் பறந்து வந்தேன்.

வகுப்பில் ஆசிரியர் இல்லா நேரம் பார்த்து அனைவரும் அரட்டையில் இருக்க இதை என் நண்பர்களிடம் சொல்ல "கோபு இவ்ளோ நடந்திருக்கு இந்த பையன் எதையும் சொல்லல பார்த்தியாட, அந்த பொண்ணு வந்தா நம்மள கழட்டி விட்டுடறான் பாரு இவன் சரியில்லடா" என கரன் பின்னால் அமர்ந்திருந்த கோபுவிடம் கூற கோபு எதையும் காதில் வாங்காமல் வேறு எதோ ஒரு சிந்தனையில் பெண்கள் பக்கம் இருக்கும் இளவரசியை கண்களால் கைது செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான். "டேய் டேய் போதுண்டா site அடிச்சது அங்கேர்ந்துதான் ஒண்ணும் reaction இல்லதானே அப்பறம் என்ன வெறுமனே லுக் சொல்லு. இந்த பையன் செஞ்சத சொன்னேன் கேட்டியா" என கரன் கூற,
"என்னடா சொன்ன, என்ன நம்ம பையன் இவ்ளோ அமைதியா இருக்கான்... ஏன்டா தனியா இருக்க ஏன் அவங்க இப்போ free யா இல்லையா, என்ன பன்றதுடா ஒரே batch ல இவ்ளோ நாள் சந்தோசமா இருந்தான் இப்போ போய் லவ் தூக்கி sorry லாவன்யாவ தூக்கி வேற batch போட்டதால பையனுக்கு ஒரே கஷ்டம் யாரோட வயித்தேரிச்சலோ தெரியலா ஆனா இதுல சிலருக்கு சந்தோசம்தான்" என கோபு என்னை ஓட்டினான். நடந்ததை எல்லாம் கரன் மீண்டும் கூற, கோபு "டேய் மச்சான் ஒரு நாளாவது எங்களுக்கு இடியாப்பம் உங்க வீட்ல செஞ்சி கொடுத்திருக்கியாட ஆனா அவளுக்கு மட்டும், இதெல்லாம் நல்லதுக்கு இல்லடா. கரன் இவன் கொஞ்சம் கொஞ்சமா மலையாலீயா மாறிட்டு வரான் நீ வேணும்னா பாரு இன்னும் கொஞ்ச நாள்ல இவன் கதகளி,மம்மூட்டி, அம்மே, அச்சன்,மலபார் னு சுத்திட்டு இருக்க போறான்" என அடுக்கினான் என்னைப் பற்றி சரியாய். "சும்மா இருடா இப்பவாது அவன் ஒழுங்கா இருக்கட்டும்" என கரன் கூறி முடிக்கும் முன்னர் வகுப்பறைக்கு HOD நுழைந்தார், அது அவரின் வகுப்பு. "Dear students we have to organize the Technical Symposium by next month end so plan and share your ideas, கரன் நான் உன்ன இதுக்கு responsibility எடுத்துக்க சொல்றேன் கூடவே 2nd & 3rd years help வேணும்னாலும் வாங்கிக்கோ" என அவர் கூறினார்.


இதைப்பற்றி பேசிக் கொண்டே வெளி வரும்போது அன்று Notice Board ல் அடுத்த வாரம் ஒரு company campus கு வருவதாக ஒட்டியிருந்தது. இது கொஞ்சம் computer software company அதனால் எங்கள் வகுப்பில் எவருக்கும் விருப்பமில்லாமல் இன்னுமொரு company ஆக நினைத்தார்கள். ஆம் அதில் கடைசிவரை சென்றது இருவர், தட்சணாமூர்த்தி மற்றும் மணி. ஆனால் இருவரும் நாங்கள் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்யாமல் வெளியேறினார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அப்போது எவருக்கும் பெரிய கவலை இல்லை. அடுத்து சில வாரம் கழித்து வந்த Ashok Leyland கம்பெனியில் தட்சணாமூர்த்தி தன் பெயரை பதித்துக் கொண்டான். நான் மீண்டும் முதல் சுற்றிலே வெளியே எரியப்பட்டேன். இதைப் பற்றி எதையும் கவலைப்படா ஒரு கூட்டத்தில் ஒருவன் என்னைப் பார்த்து "டேய் நீ இன்னும் எத்தனை கம்பனிதாண்டா போய் போய் வருவ இந்த கம்பெனியோட Hat trick அடிச்சிட்ட வாழ்த்துக்கள்டா கதிர்" எனக் கூற கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும் முன்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் மனதில் ஆழமாய் பதிந்தது. அவனை எதிர்த்து பேசமால் வந்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. ஆம் அவன் லாவண்யாவின் ப்ராஜெக்ட் batch.

மனதில் சந்தோசத்தின் சதவிகிதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது போல் உணரத் தொடங்கினேன்..

(தொடரும்)


அன்புடன்
கருணா

Saturday, March 08, 2008

முத்தச்சாரல்....

ஒரு கோடி முத்தங்களை
ஓர் இரவில் கொடுக்க ஆசைதான்
என்ன செய்ய இருப்பது இதழ் இரண்டுதானே.....

நீ கோபப்படுவதெல்லாம்
என் முத்தப்பரிசை பெறத்தான் என
உன் பொய்க் கோபம் என்னிடம் உண்மை சொன்னது...

கட்டியணைத்து கொடுக்கும் முத்தத்தை விட
கட்டளையிட்டு நீ வாங்கும் முத்தம்
உன் மொத்தத்தையும் சொல்கிறது......

இடைவெளியில்லாமல்
இதழ் வலியில்லாமல்

இரு ஜோடி இதழ்களால்
ஒரு கோடி கவிதைகள் வரைவோம் வா...

நீயும் நானும் சேர்ந்து கொடுக்கும் முத்தத்தை
என்னவென்று சொல்வது
கொடுக்கும் முத்தமா?
வாங்கும் முத்தமா?
இல்லை நிசப்த யுத்தமா.....

உன் ஒவ்வொரு முத்தத்தால் ஒரு ஆயுள் அதிகமாகுமென
இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவன் நான்.
இப்போது என் ஆயுள் உன் இதழில்....

இதழ் ரசம் இவள் வசம்
அது என் மீது வழிந்தால் ஆவேன் பரவசம்....

உனக்கும் எனக்கும் அப்படி என்ன பெரிய சண்டை
இப்படி முட்டி மோதிக் கொள்கின்றன நம் உதடுகள்
இதற்குப் பேர்தான் முத்தப்போரோ?

அன்புடன்
கருணா

Wednesday, February 13, 2008

காதல் வரிகள்


"புல்வெளி மீது நடக்காதீர்"
அங்கிருந்த புற்கள் அனைத்தும் வாடியது வாசகத்தைக்கண்டு
உன் பாதம் அதன் மீது படாததால்..."

"நீ கிளம்பி வீட்டைவிட்டு வெளிவரும் முன்னரே
காற்றெல்லாம் தன்னை அழகுபடுத்திக்கொண்டு
உனக்காக விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றன
உன் பூ முகத்தை முத்தமிட..."

"காதலும் கவிதையும் சண்டையிட்டுக் கொள்கின்றன
உன்னை நான் முதலில் எதைக்கொண்டு வர்ணிப்பேன் என்று..."

"உன் தோட்டத்தில் ரோஜாக்கள் அனைத்தும் மயங்கி கிடக்கின்றன
காலை உன்னைப் பார்த்து பூத்த மயக்கத்தில்..."

"நீ கைதொட்டு பறித்து வைத்துக்கொண்ட ஒரு மலர்,
ஏளனமாக என்னைப் பார்த்து சிரிக்கின்றது
உனை தீண்டிய இன்பத்தில்...."

"காதலுக்குள் காதல்"
இதை இப்படி சொன்னால் என்ன..
"உனக்குள் நான்"

"கவிதையில் அடங்கிவிடுகிறாய்
உன் காதலில் எனை அடக்கி சிரிக்கிறாய்..."

"நாளை உலகத்தின் கடைசி நாள்
என்றாலும் கவலை இல்லை
இன்று உனை கண்டு என் காதலை சொன்னால்..."

அன்புடன்
கருணா

Wednesday, February 06, 2008

சுவடுகள்-V



தேர்வுகள் முடிந்த நேரம், மனதில் எந்த கவலையும் இல்லாமல் அரட்டையோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம்.
எப்போது இறுதி வருட வகுப்பில் காலடி வைப்போம் என்ற கனவுடனே நாட்கள் ஓடியது. மூன்றாமாண்டு முடிந்த நேரமே அனைவரும் CampusI Interview, இதற்கு தங்களை தயார் படுத்திக்கொண்டார்கள். பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல, நானும் கரண் உடன் சேர்ந்து அதற்காக ஏதோ படிக்க ஆரம்பித்தேன். எனக்கும் எப்படியாவது கல்லூரி முடியும் முன்னரே ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என்ற கனவு மட்டும் கண்களில் தவழ்ந்து கொண்டே இருந்தது. இவையெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, எதை பற்றியும் கவலைப்படாதா ஒரு கூட்டமும் ஒன்று உண்டு. சந்தோஷ்தான் இதன் தலைவன். இவன் படிப்பில் கொஞ்சம் கெட்டிக்காரன்.அந்த கூட்டத்திற்கு வேண்டுமானால் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் சந்தோஷின் நிலை அவனுக்கு தெரியும்.


ஆனால் அவன் எப்போதும் எங்கள் வகுப்பின் மீது ஒரு வெறுப்பாகவே இருப்பான், அதன் காரணம் என்னவென்று எங்களுக்கு கேட்க விருப்பமில்லை. எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது பிடிக்கும், ஆனால் எல்லோரிடமும் அதுமாதிரி இருக்க விரும்பமாட்டான். எங்களிடம் கொஞ்சம் உரிமை அதிகமாக எடுத்துக்கொண்டே பேசுவான் எந்த பாரபட்சமும் இல்லாமல். அவனக்கு எங்கள் வகுப்பு மீது இருக்கும் கோபம் என்னவென்று தெரியும், காரணம் அவன் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்பில் நடந்த CR தேர்வில், ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் நின்ற அவனால் வெற்றி பெற முடியவில்லை, இரண்டு முறையும் அவன் பெற்றது சில வாக்குகளே. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், அவன் ஒட்டி ஒட்டாமல் மற்ற நண்பர்களோடு இருப்பதற்கு. எங்களைப் பொருத்தவரை எந்த பாகுபாடில்லாமல் நாங்கள் அவனுடன் பழகுவோம் அவனும் அதுமாதிரிதான். நான் லாவண்யாவின் நண்பன் என்ற ஒரு காரணமும் அதன்பின்னே இருக்கலாம். கடைசி ஆண்டு கல்லூரி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் எங்கள் கல்லூரிக்கு TVS Motors நிறுவனம் campus Interview வந்தது. எங்கள் வகுப்பில் படிக்கும் அனைவருக்கும் அது கனவு Company. அந்த company க்கு கரணை விட வேற ஒரு ஆள் எப்படியும் select ஆகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இருந்தது. அன்று நடந்த எழுத்துத் தேர்விலேயே எங்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டார்கள். அன்று பெரியதாக ஒரு மனக்கஷ்டம் இல்லை, காரணம் கரண் கடைசிவரை சென்றிருந்தான்,அவனுடன் நம்ம சந்தோசும்.


Technical, HR என அனைத்து interview முடிந்து கரணும்,சந்தோசும் இறுதி முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அன்று இரவு ஒரு 10 மணி அளவில் முடிவை சொன்னார்கள், எங்களின் எதிர்பார்ப்பை போலவே கரண் பெயரை சொன்னார்கள். அவனுக்கு மகிழ்ச்சி மனதில் பெருக்கெடுத்து ஓடியது எங்களுக்கும்தான். நாங்கள் அன்று இரவே அதை ஒரு பெரிய விழாவாக கொண்டாடிவிட்டோம். சந்தோஷ் வேகமாக வந்து கரணுக்கு கை குலுக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

கல்லூரியும் தொடங்கியாயிற்று.
முதல்நாள் முதல் பாடவேளையே ஒரே அறிவுரையாக சென்றது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நாங்கள் எல்லாம் எப்போது போலவே Interval க்கும் Lunch க்கும் காத்துக் கொண்டிருந்தோம். முதல்நாள் முடியும் வேளையில் மீண்டும் CR election. கரண் என்னிடம் " டேய் கதிர் இந்த election ல நாம மூணு பேர்ல ஒருத்தன் நிக்கறோம், யார் நின்னாலும் நமக்குத்தான் இந்த CR Post. இதுவரைக்கும் நின்னவங்க ஒண்ணும் பெருசா பண்ணல so நாம உருப்படியா எதாவது நம்ம class க்கு செய்யணும் OK வா" என்றான். வகுப்பில் எங்களுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும் என்று தெரியும், அந்த நம்பிக்கையில்தான் கரண் கூறினான். நாங்கள கரணை முன்மொழிய, அவனுக்கு எதிராய் மீண்டும் சந்தோஷ். "டேய் என்னடா இவன் நம்மகிட்ட ஒழுங்கா பேசறான் ஆனா எதுக்கு இந்த வீனத்த வேலை சொல்லு, கம்முனு வந்தமா ஒரு பொண்ணு pickup ஆச்சு.. போனமா இல்லாம தலய எதிர்த்து ஏன் இந்த election ல அவன்" என கூறினான் கோபு. தேர்தலின் முடிவில் மீண்டும் அவனுக்கு கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை 7. மிச்சமிருந்த 53 வாக்குகளும் கரணுக்கு விழ அவனுக்கு இன்னும் கொஞ்சம் வெறுப்பு அதிகமானது எங்கள் வகுப்பின் மீது. "டேய் அவன் எவ்ளோ சொல்லியும் கேக்கல நிக்காதனு சொல்லியும் நின்னான் அப்பறம் இந்த அசிங்கமெல்லாம் தேவையா சொல்லு" என செல்வா கூற "டேய் என்னடா இப்படி சொல்ற அவன் பங்காளி பக்கத்துலே இருக்கான், அவன் முன்னாடியே இப்படி சொல்றியே கோச்சிக்க போறான் இவன் " என என்னை நோக்கி வெறுப்பேற்றினான் கோபு.


மறுநாள் லாவண்யா என்னிடம் ஏதாவது பேசுவாள் என்று நினைத்தேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்காத காரணத்தால், நானே போய் ஆரம்பித்தேன். "என்ன madam ரொம்ப busy போல, நேத்து கண்லே படல, எங்க போய்டீங்க" எனக் கேட்டேன். லாவண்யா "இல்ல நேத்து கொஞ்சம் தலவலி அதான் hostel போய்ட்டேன்" என்றாள். காரணம் எனக்கு விளங்கியது, அதை எனக்குள்ளே வைத்துக்கொண்டு, ஏதும் தெரியாதது போல், "ஏன் என்ன ஆச்சு இருக்கறப்பவே" எனக் கேட்க, "சந்தோஷ்கிட்ட நான் இந்த CR election ல நிக்க வேணாம்னு எவ்ளோவோ சொன்னேன் கதிர் ஆனா, என் பேச்ச கேட்காம போய் அவன் நின்னான்" என்றாள். "சரி நீ ஏன் அவன்கிட்ட போய் சொல்ற, அப்படி என்ன உங்க 2 பேருக்குல்லேயும்" என்று கேட்டேன். அதற்கு லாவண்யா "எல்லாம் தெரிஞ்சிகிட்டே நடிக்காத கதிர் உனக்கு எதுவும் தெரியாதா" என சற்று கோபமாக கூறினாள். எனக்கும் கொஞ்சம் தைரியம் வந்து "எனக்கு என்ன தெரியும் சொல்லு. நீ ஏதாவது என்கிட்டே சொன்னியா சொல்லு. அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்குல்லேயும், நீயே சொல்லதப்போ நான் என்னனு எடுத்துகறது" எனக் கேட்டேன். அவளோ "ஏன் கதிர் எதுவும் தெரியாது போல நடிக்கற, அவன நான் Love பண்றது உனக்கு தெரியுமில்ல அப்பறம் என்ன" என அதை முதன் முதாலாக என்னிடம் கூறினாள். ஏனென்று தெரியவில்லை அவள் வாயாலே அதைக் கேட்டது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் அதை நான் எதிர்பார்த்ததுதான். நான் தோழி என்ற நோக்கத்தில் பார்த்தாலும் அடுத்தவன் காதலி என அவளே கூறும்போது சற்று இறுக்கமாகத்தான் இருந்தது மனதில். அதற்கு மேல் அவள் வார்த்தைகளை கேட்க எனக்கு பொறுமையில்லாத காரணத்தால், இதற்குப் பிறகும் இதைப்பற்றி நான் அவளிடம் விசாரித்தால், அது இந்த நட்பின் விரிசலுக்கு காரணம் ஆகிவிடுமோ என்று நினைத்துக்கொண்டு வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அப்படியே அங்கிருந்து வந்து விட்டேன்.


"என்னடா நேத்து எதோ ஒரு பெரிய discussion போல, madam அப்பறம் நீங்க எதோ ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தீங்க, நாங்களும் எவ்ளோ நேரம்தாண்டா உனக்கு wait பண்றது சொல்லு, எதோ important discussion நினைச்சோம். அதான் சொல்லிக்காம கிளம்பிட்டோம், " என்றான் கரண். "இல்லடா நேத்து அவ சந்தோஷ பத்தி கொஞ்சம் சொன்னா அதான்" என்றேன். "ஆமா உனக்கு ஒண்ணும் தெரியாது அவங்க எல்லாத்தியும் சொன்னாங்க போடாங்க, நீயும் உன் கதையும்" என்றான் கோபு. அதற்குப்பிறகும் நான் எப்போதும் போலத்தான் அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.


ஒரு வாரம் கழித்து அனைவரும் Project முடிவு செய்வதற்கு busy ஆனார்கள். அவரவர் அவர்களின் project ல் ஆட்களை தாங்களாக பிரித்துக் கொண்டார்கள். எங்கள் மூவரை யாரும் வந்து அழைக்கவில்லை அவர்களின் project க்கு, ஏனெனில் எல்லோருக்கும் தெரியும் இந்த மூவர் கூட்டத்தை பிரிக்க முடியாது என்று. இந்த மூவரோடு சேர்த்து நான்கவதாக ஒரு ஆளை சேர்த்துக் கொள்ளலாம் என்று கரண் மற்றும் கோபுவிடம் யோசனை கூறினேன் நான். அவர்களுக்கு அதன் காரணம் தெரிந்துவிட்டது. "டேய் நீயெல்லாம் திருந்தவே மாட்டியாடா, உன்னையெல்லாம் இன்னும் ஒரு 100 கரண் வந்தாலும் திருத்த முடியாதுடா" என நகைத்தான் கோபு. "நீ எதுக்கு கேட்கறனு தெரியும், ஏன் அந்த அக்காவ நம்ம project ல சேர்த்துக்கணும் அதானே" எனக் கூறினான் கரண். "டேய் இவனோட plan எனக்கு தெரிஞ்சு போச்சுடா, நாம 4 பேர் சேர்ந்தா வச்சிக்கோ, இவங்க ரெண்டு பெரும் வேற project பண்ணுவாங்க, நாம ரெண்டு பேர் மட்டும்தாண்டா உண்மையான project பண்ணனும், கோபு இவன நம்பாத" என கரண் முடித்தான்.

நான் குறுக்கிட்டு"டேய் அந்த பொண்ணு என்கிட்டே கேட்டுச்சுடா அத உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன், ஆனா நாம 4 பேரும் சேர்ந்து செஞ்சா நல்ல இருக்கும்னு எனக்கு தோனுதுடா", " யாருக்கு உனக்கு நல்லா இருக்கும்டா, ஆனா எங்க நிலமைய கொஞ்சமாவது யோசிச்சியா சொல்லு, கரண் இவன் நம்மள இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாதுகாப்பான படைவீரர்களா மாத்த பார்க்கிறான் இவன நம்பாத" என கூறினான் கோபு. இவ்வளவு நடந்தும் எனக்கோ மனதில் அவள் மேல் இருந்த மரியாதை சற்றும் குறையவில்லை. இதை புரிந்து கொண்ட அவர்கள் என் பொறுமையை சோதித்துப் பார்க்க விளையாட்டுக்கு என்னிடம் "சரிடா இப்போ உனக்கும் எங்களுக்கும் Toss போடலாம், பூ விழுந்தா அவள நாம சேர்த்துக்கலாம், அப்படி தல விழுந்தா தல சொல்றததான் நீ கேட்கணும் சரியா" என்றான் கோபு. நானும் அதிர்ஷ்டத்தை என் பக்கம் வைத்துக் கொண்டு தலை ஆட்டினேன். அந்த பாழாய்ப்போன 1 ரூபாய் தலையை காட்டியது. உடனே நான் குறுக்கிட்டு "டேய் மொத்தம் 3 தடவ போட்டு பார்க்கலாம், இப்போ 1 over so அடுத்த ரெண்டு முறை coin twist பண்ணுவோம், so அதுல என்ன விழுதோ அது படி நடக்கலாம் ஓகேவா" என்றதும் இருவரும் என்னை ஒரு கேவலமான வார்த்தையில் திட்டிவிட்டு மீண்டும் toss போட்டார்கள். மூன்று முறையும் தலையே விழ எனக்கு அதன் பிறகு ஒன்றும் என்னால் பேசமுடியவில்லை. ஆனால் என் மனதை புரிந்து கொண்ட கோபுவும் கரணும் "சரிடா இதெல்லாம் விடுடா நாம 4 பேரும் செய்யலாம், என்ன பண்றது உன்கூட இருக்கறதால இதெல்லாம் எங்களுக்கு தேவைதாண்டா..எல்லாம் உனக்காக" என்றான் கரண்.

4 பேர் என்று முடிவு செய்துவிட்டு எங்கள் project guide அவரை போய் சந்தித்த போது அவர் ஒரு பெரிய குண்டை தலையில் போட்டார். "Sir நாங்க 4 பேர் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம்" என்றான் கரண். உடனே அவர் " இங்க பாருங்கப்பா இந்த வருசதுலேர்ந்து 3 பேருதான் ஒரு project க்கு HOD சொல்லிட்டார் so நீங்க decide பண்ணி சொல்லுங்க" எனக் கூறிவிட்டார். "சரிடா நீங்க 3 பேர் செய்ங்க நான் வேணும்னா செல்வா கூட பண்றேன்" எனக் கூறினான் கோபு, உடனே நான் குறுக்கிட்டு "டேய் நாம 3 பேர்தாண்டா செய்றோம் அவ்ளோதான் நான் அவகிட்ட ஏதாவது சொல்லிடறேன்" என்றேன்.எனக்கு அப்போது அவள் முக்கியமாக தெரியவில்லை ஆனால் அவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்றுதான் யோசித்தேன்.


இதை எப்படி அவளிடம் போய் சொல்வதென்று தெரியாமல் அவளை அன்று தேடிக் கொண்டிருந்தேன். அனைத்து இடத்திலும் தேடிவிட்டு கடைசியாக பேருந்துக்கு செல்லலாம் என தொடர்ந்த போது லாவண்யா சந்தொஷுடன் வேகமாக வந்து கொண்டிருந்தாள். நான் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று முன்பே தெரிந்ததுபோல் சந்தோஷ் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். "லாவண்யா... வந்து உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல" என நான் இழுக்கும்போது, அவள் மிகவும் தயக்கமாக "கதிர்.. .நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும், நான் உன்கூட project பண்றேன்னு சொன்னேன்ல ஆனா இப்போ நான் சந்தோஷ்கூட பண்ணலாம்னு இருக்கேன் நீ எதுவும் தப்பா எடுத்துக்காத சரியா.. என் நிலைமை அப்படி. இப்போ எங்களுக்கு ஒரு நல்ல company ல project கிடைச்சிருக்கு அங்கே பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. அங்கதான் போய்ட்டு வரேன்" என அடுக்கிக்கொண்டே போனாள். என்னிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது அவனிடமிருந்து எதோ கண்ணால் சைகை வர "நாளைக்கு பார்க்கலாம் கதிர்" என வேகமாக நகர்ந்தாள், அவளுக்காக wait பண்ணும் சந்தோஷ் திசை நோக்கி.


எனக்கோ என்னடா இவள புரிஞ்சிக்கவே முடியலையே என உள்ளுக்குள்ளே நினைத்துக் கொண்டு ஒரு பெரு மூச்சோடு அங்கிருந்து நகர்ந்தேன். என்னோட நிலையையும் நான் மெல்ல உணர ஆரம்பித்தேன். அன்று மாலை பேருந்தில் நாங்கள் எப்போது பயணிக்கும் கடைசி இருக்கையில் தலை கவிழ்த்த என் மனதில் பல குழப்பங்கள் அரங்கேறத் தொடங்கியது.

(தொடரும்)

அன்புடன்
கருணா


Tuesday, January 01, 2008

சுவடுகள் - IV

விடுமுறை நாட்களை ஓடத்தில் கடலைக் கடந்தவன் போல மெதுவாய் கடந்துவிட்டேன்.
6 வது செமஸ்டர், நானும் மனதில் பல எண்ணங்களுடனும் எதிர்பார்புகளுடனும் தொடங்கினேன். இதோ இன்று ஒரு புதியவளை உங்களுக்கு அறிமுகப்படுத்த போகிறேன் "கீதா". இவளும் எங்கள் வகுப்புதான், எங்களுடன் இருக்கும் 18 பெண்களில் அழகு கொஞ்சம் அதிகமாகவே இவளிடம் கொட்டி கிடந்தது. ஆனால் எப்போதும் தலை நிமிராமல் அவ்வளவு அடக்கமாக செல்வாள். அவளிடம் இதுவரை மூன்று பேர் தன் காதலை சொல்லி தடுக்கி வீழ்ந்திருக்கிறார்கள், அதுவும் எங்கள் department அல்லாதவர்கள். எங்கள் வகுப்பை சேர்ந்த தருண் என்றவனுடன் மட்டும் பேசி கொண்டிருப்பாள், அவன் அவளின் குடும்ப நண்பன் என்பதால். இவள் கதாபாத்திரத்தின் முக்கியம் என்னவென்றால், கீதா மீது கரனுக்கு ஒரு சிறிய கண். நாங்களும் அவனை அவளோடு இணைத்து பேசும் போது
மறு வார்த்தை கூற மாட்டான், உள்ளுக்குள் மட்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதிப்பான். "டேய் மச்சான் கல்யாணம் பன்னா எப்படியும் Love பண்ணிதாண்டா கல்யாணம் பண்ணனும், அதுவும் கல்யாணம் பன்னா அந்த மாதிரி பொண்ணதான் கல்யாணம் பண்ணனும், என்ன தெய்வீகம் அவளுக்குள்ள, எல்லா பெண்களுமே அழகுதாண்டா ஆனால் அவள் அதுக்கும் கொஞ்சம் மேலடா" இது அடிக்கடி அவன் அவளைப் பற்றி கூறும் வார்த்தைகள். நாங்களும் எப்போதும் அவனை ஒட்டிக் கொண்டே இருப்போம்.
"ஏன்டா இவ்ளோ பேசற எங்கள எல்லாம் ஓட்ற ஆனா போய் டக்குனு உன் காதல சொல்ல வேண்டியதுதானே" என்றான் கோபு.
"டேய் Love சொல்றதுக்கும் கொஞ்சம் யோசிக்கனும்டா, நாம சொல்றதுல அந்த பொண்ணு எந்த எதிர் பேச்சும் பேசாம அப்படியே நம்ம வார்த்தைல விழணும், சும்மா நானும் சொல்றேன்னு சொல்லக் கூடாதுடா, அதுக்கெல்லாம் எவ்ளோ கற்பனை வச்சிருக்கேன்" என்று முடித்தான். "சரி என்ன சொல்லப் போற, எப்படி சொல்லுவ". என்றேன் நான். "அப்படியே ஒரு 50 ரோஜா, நம்ம juniors கிட்ட கொடுத்து யார் கொடுக்கறதுன்னு அவளுக்கே தெரியாம கொடுக்கணும், அதுல கடைசி ரோஜா நான் கொடுத்து என் மனசுல அவள் இருக்கறத சொல்லனும்டா" என்றான் கரன். ஆம் கரன் மனதில் அவள் சற்று அதிகமாகவே ஆட்டம் போட்டு கொடிருந்தாள். அதை கொஞ்சம் வெளியே காட்டமாட்டான். ஆனால் நாங்கள் துருவி அதை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விடுவோம். அன்று ஒரு நாள் அவன் கூறிய வார்த்தைகள், என்றோ அவளிடம் சொல்வதற்காக "கீதா நான் யார கல்யாணம் பண்ணாலும் சந்தோசமா இருப்பேன், ஆனா நான் உன்ன கல்யாணம் பண்ணா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருப்பேன், உன்னோட முடிவுக்காக நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்திருப்பேன், உன் முடிவ நீ சொல்லு". இதை அவன் எங்களிடம் கூறும்போது எங்களுக்கு அவன் காதலை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று எண்ணினோம். இவன் காதல் எங்கள் மூவரைத் தவிர வெளியே யாருக்கும் தெரியாது. எங்களுக்கு மட்டும் ஒரு அபார நம்பிக்கை இருந்தது கரன் போய் அவன் காதலை அவளிடம் கூறினால் கண்டிப்பாக அவள் ஏற்று கொள்வாள். அந்த நாட்களுக்காக நாங்களும் காத்துக் கொண்டிருந்தோம்.

கல்லூரி திறந்து இரண்டு வாரம் சென்றும் லாவண்யா என்னிடம் பேசவில்லை. இந்த ஆண்டு எந்த labல் அவள் என்னோடு சேர்ந்து செய்ய போகிறாள் என்று யோசித்துக் கொண்டே இருப்பேன். Measurements lab னு ஒரு lab, இதில் மொத்தம் 5 பேர் ஒரு batch கு. அதில் மீண்டும் என்னோடு அவள். நான்,அவள்,கரன்,கார்த்தி மற்றும் லக்ஷ்மணன். மனதில் ஒரு மெல்லிய சந்தோசம். இந்த lab ல் எந்த சந்தேகமாக இருந்தாலும் அவள் என்னிடம் மட்டும் கேட்பாள்.


அப்படியே வாழ்க்கை போய் கொண்டிருந்தது. எங்கள் பேச்சும் தொடர்ந்தது. எப்படா free period கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருந்த நாட்களும் பல உண்டு, அவளிடம் சற்று நேர பேசலாமே என்பதற்காக. ஒரு நாள் Manufacturing Engg. lab முடித்துவிட்டு திரும்பும் வேளையில், கரன் "டேய் நான் அந்த லாவண்யா பொண்ண கொஞ்ச சத்தமா பேசிட்டேன், ஏதோ பேசிகிட்டு இருக்கறப்போ கொஞ்சம் திட்டிட்டேன் ஆனால் என் மேல எந்த தப்பும் இல்லடா அவ்ளோதாண்டா" என கூறினான். அவள் கண்ணீருடன் என்னருகே வந்தால். நான் என்ன காரணம் என்று விசாரிக்கும் முன்னரே கரன் அவளிடம் சென்று " இங்க பாரு லாவண்யா நான் உன்ன கஷ்ட பண்ணனும் திட்ல அப்படி hurt பன்னிருந்த I am sorry அவ்ளோதான்" என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான். நான் இருவருக்கும் இடையே நின்று கொண்டு, அவளை முதலில் சமாதானம் செய்துவிட்டு வேகமாக கரன் பின்னே ஓடினேன். "டேய் உன்னோட முகத்துக்காகதண்டா நான் sorry கேட்டதே, அவன் ஏன்டா தேவை இல்லாம என்ன பத்தி முன்னால ஒன்னு சொல்லணும் அப்பறம் பின்னால போய் வேற மாதிரி பேசணும் அது எனக்கு பிடிக்கல திட்டிட்டேன், நான் பண்ணது தப்பில்ல அவ்ளோதான்" நான் அவனிடம் என்ன காரணம் என்று கேட்காமலே கூறினான். அதன் பிறகு அவள் கரனை கண்டால் சற்று பயத்தோடுதான் பேசுவாள். "என்ன உன் friend கு அவ்வளோ கோபம் வருது, நான் ஏதோ தெரியாம பேசிட்டேன் அதுக்காக என் என்ன திட்டனும் சொல்லு" என்றாள். ஆனால் அதை பற்றி எனக்கு கேட்க விருப்பமில்லாததால் அதை அவளிடம் விசாரிக்க என் மனம் போகவில்லை. அவளும் என்னிடம் அவனைப் பற்றி தவறாக எதுவும் கூறமாட்டாள். அவர்களை சமாதானப்படுத்தி இருவரையும் என் வழிக்கு கொண்டு வருவதற்குள் நான் மிகவும் கஷ்டப் பட்டுவிட்டேன்.

கரன் அடிக்கடி என்னிடம் கூறுவான் "டேய் நாம மூணு பேரும் எப்பவும் ஒண்ணா இருக்கணும்டா, இதுல ஒரு பொண்ணு வந்து நமக்குள் எந்த மன கஷ்டமும் வரக்ககூடாது". கரனுக்கு அவள் மீது கொஞ்சம் சந்தேகம் எப்பவும் இருந்து கொண்டே இருந்தது, அதற்கு நான் எந்த விதத்தில் ஏமாற்றத்தை கண்டுவிடக்கூடாது என்ற ஒரு காரணமும் உண்டு.

அதுவரை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. எனக்கும் அவளுக்கும் உள்ள உறவு என்ன என்றே எனக்கே தெரியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கு உலகம் சொன்ன பெயர்கள் பல.. நட்பு,காதல்,கடலை என நீண்டது. ஆனால் என் மனதிற்கும் அது என்னவென்று தெயயவில்லை. அவள் நம்மிடம் பேசினால் மட்டும் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்படியே நாட்களை தள்ளிக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் கரன் என்னிடம் வந்து "மச்சான் நான் ஒன்னு கேள்வி பட்டேண்டா, பசங்களும் அப்படித்தான் சொல்ராங்கடா, லாவண்யா..லாவண்யா வந்து நம்ம class சந்தோஷ் அவன லவ் பண்ராலாம், ஆனா இது எதுவுமே நமக்கு வெளிய தெரிய மாட்டேங்குது, அப்பறம் என் அவன் உன்கிட்ட இப்படி பேசறானு தெயயல" எனக் கூறி என் மனதை சற்றே கலக்கத்தில் கரையவிட்டான். அது வரை என்ன உறவு என்று மனம் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் அவள் மற்றொருவனுக்கு சொந்தமாக போகிறாள் எனத் தெரிந்ததும் மனம் குழப்பத்தில் ததும்பியது."மச்சான் நான் இத உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன், அப்பறம் நாமளும் மனசுல ரொம்ப ஆசைய வளத்துக்க கூடாதுல அதுக்குதாண்டா" என கோபுவும் கூடவே கூற நான் குறுக்கிட்டு "இல்லடா அவள் என்கிட்டே எதுவா இருந்தாலும் சொல்வாடா, ஆனால் அவங்க ரெண்டு பேரும் பேசி நாம பார்த்ததே இல்லையே". "ஆமாண்டா நாங்களும்தாண்டா பார்த்ததில்ல, அவங்க ரெண்டு பேரும் college முடிஞ்சதுக்கு அப்பறம்தான் பேச ஆரம்பிபாங்களாம், அப்பறம் every weekend பார்த்து பேசுவாங்களாம், hostel பசங்க சொல்றாங்க, நாமதான் correct time கு இங்கேர்ந்து கிளம்பிடறோம், அதான் நமக்கும் ஒண்ணும் தெரியறது இல்ல" என கோபு கூறினான். எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை, இதை பற்றி அவளிடம் கேட்கவும் தைரியமில்லை.

அதற்குப் பிறகும் அவள் என்னுடன் எப்போதும் பேசுவதையும் நிறுத்தவில்லை. அன்று வேண்டுமென்றே நான் கல்லூரி முடிந்த பிறகும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன். அன்றுதான் முதன் முதலாக அவர்கள் இருவரும் பேசுவதை நான் கண்டேன். இதை நான் நண்பர்களிடமும் கூறினேன். "டேய் எனக்கு அப்பவே தெரியும்டா, இந்த மாதிரி அழுது காரியத்த சாதிக்கற பொண்ணுங்களை நம்பக் கூடாது" என மிக கோபமாக கூறினான் கரன். "நீ பேச வேணாம்னு சொல்லல, அது இதுக்கப்பறம் நாம நம்ம limit பார்த்து நடந்துக்கணும், அவளுக்காக எவ்வளவோ நீ செஞ்சிட்ட அவ்ளோதாண்ட நான் சொல்வேன்." என்று கோபுவும் கூற நான் அவர்கள் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதை உணர்ந்தேன்.
ஆனால் அவளிடம் திடீரென பேசுவதை நிறுத்துவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
ஏனென்றால் என் மனம் நான் சொல்வதை கேட்கும் நிலையில் அப்போது இல்லை. அவளும் என்னிடம் எப்போதும் போல் பேசுவாள்.
என்னிடம் எந்த சந்தோசத்துடன் பேசுவாளோ அதே சந்தோசம் மகிழ்ச்சி அவனிடம் பேசும்போதும். நான் அதை சற்றும் கவனிக்காமல் அப்படியே என் பாதை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். மறு நாள் அவள் என்னிடம் இதை சற்றும் காட்டிக் கொள்ளாமல் என்னிடம் எப்போது போல பேசி கொண்டிருந்தாள். அவளின் அந்த காதல் அத்தியாயத்துக்குள் நானும் தலையிட விரும்பவில்லை.


அவள் எப்போதும் என்னிடம் சொல்ல நினைக்கிறாளோ அன்று சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் கரனுக்கும், கோபுவுக்கும் அவள் ஏன் இப்படி என்னிடம் சொல்லாமல் எல்லாம் செய்கிறாள் என்ற கோபம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. என்னுடன் என்னதான் மணிக்கணக்கில் பேசினாலும் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் சந்தோஷ் அவன் வேலையை பார்த்துக் கொண்டிருப்பான். லாவண்யாவும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது என் நட்பை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அது நட்பு என்று நான் எனக்குள்ளே உறுதிப் படுத்திக் கொண்டேன். அதை நான் நட்பு என்று எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கும் ஒரு படி மேலாக நினைத்து நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். இப்படியே நாட்கள் செல்ல செல்ல என்ன நடக்கிறது என்று எனக்கே தெரியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. அவள் ஏன் நம்மிடம் அவனைப் பற்றி பேச மறுக்கிறாள் என்ற கேள்வியையும் நான் எனக்குள்ளே பல முறை கேட்டும் என் மனது அவளிடம் பேசுவதை நிறுத்தவில்லை. 6 வது semester முடியும் தருவாயில் எங்களை final year project செய்வதற்கு இப்போதே batch பிரிக்க சொன்னார்கள். நாங்கள் ப்ராஜெக்ட் தேடும் ஆர்வத்தில் இருந்தபோதும் எனக்கும் உள்ளுக்குள்ளே அவர்களைப் பற்றித்தான் உள் மனதில் சிந்தனை வெள்ளோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.
லாவண்யா என் நட்புக்கும் சந்தோஷின் காதலுக்கும் இடையில் நாட்களை கரைத்துக் கொண்டிருந்தாள்.


இதன் பிறகு என் நிலை என்ன?
நான் எப்படி இருக்க வேண்டும் என்று என் மனம் சற்றும் யோசிக்கவில்லை. ஆனால் அவளிடம் மட்டும் பேச வேண்டும். அதை மட்டும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.



அன்புடன்
கருணா

Monday, December 31, 2007

காதலும்...கவிதையும்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இந்த வருடத்தின் முதல் பதிவு.




வானில் நீலம் இருக்கும் வரை
நிலவில் கறை நீங்கும் வரை
கடலின் அலை ஓயும் வரை
பூமி அமைதியில் நிற்கும் வரை
என் நிழல் உன்னை விட்டு பிரியும்வரை
விரல்கள் உன்னைப்பற்றி கவி வரைந்துகொண்டே இருக்கும்
இதயம் காதல் வளர்த்துக் கொண்டே இருக்கும்...


அன்புடன்
கருணா