ஆனால் நான் இதைப் பற்றி ஏதும் நினைக்கமால் Beach ல் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கொஞ்சம் நழுவி யாருக்கும் தெரியாமல் நான் லாவண்யாவுக்கு வாங்கிய பிறந்த நாள் பரிசு பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஆம் மறுநாள் லாவண்யாவின் பிறந்த நாள். அவள் என்னதான் என்னைவிட்டு தள்ளி இருந்தாலும் அவள் பிறந்தநாளை நான் விட்டுத்தள்ள விரும்பவில்லை. மறுநாள் நான் வாசலியே வேடிக்கை பார்த்த நேரத்தில் கணப் பொழுதில் ஒரு மஞ்சள் சுடிதாரில் மங்களகரமாய் வந்தமர்ந்தாள் லாவண்யா. அன்று எவ்வளவு எண்ணியும் என்னால் மதியம் வரை பேச முடியவில்லை. கரன் "என்னடா அதுக்கு பொறந்தநாள் நீ என்ன வெறும் கையோட வந்துட்ட" உடனே கோபு என் bag ல் இருந்த அந்த gift ஐ ஆராய்ந்து எடுத்து "டேய் கதிர் இது என்னடா", நான் "அது வந்து அது வந்து சும்மா ஒரு gift நேத்தே வாங்கிட்டேன், அதான் ஒரு xerox எடுக்கனம்னு நடுல நேத்து போனேன்ல அப்போ" என பல்லை இளித்துக் கொண்டே கூற, "டேய் கரன் இவன பார்த்தியாடா கண்டிப்பா இவன் ஒரு கள்ளன்டா நாம ரொம்ப ஜாக்கிரதயா இருக்கணும் அப்பறம் இவன சரியா follow பண்ணனும்... " என நகைத்தான். ஒரு வழியாக லாவண்யாவை சந்திக்க ஒரு free period கிடைத்தது அன்று. வகுப்பில் யாருமில்லா நேரத்தில் அவளே என் இடத்திற்கு வந்தாள். "Happy Birthday லாவண்யா ஒரு சின்ன gift வாங்கனேன் பிடிச்சிருக்கா" என நான் கேட்க அவளின் Thanks கண்களில் தெரிந்தது ஒரு புன்னைகையோடு .
" கதிர் evenig canteen க்கு வா ஒரு சின்ன treat..அப்பறம் தனிய வராதா உன்னோட ரெண்டு கூட்டாளிகளையும் கூட்டிட்டு வா நான் இப்போ hostel போயிட்டு வரேன்" என சிரித்துக் கொண்டே சென்றாள். வகுப்பை விட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் இரண்டு அடி பின்வைத்து "Thanksடா கதிர்" என்று சொல்லிவிட்டு சென்றாள். வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வானத்தில் வட்டமிடத் தொடங்கினேன்.மேலே பறந்து கொண்டிருந்த வேளையில் யாரோ இருவர் வேகமாக பிடித்து இழுப்பதுபோல் இருந்தது. "Sir class ல நீங்க மட்டும்தான் இருக்கீங்க கொஞ்சம் வேற உலகத்துக்கு வரியாடா வெண்ண கரன் அங்க வெயிட் பண்றான்" என்று மண்டையில் தட்டி கோபு என்னை எழுப்பினான். நான் அவர்களை பார்த்து "டேய் லாவண்யா canteen க்கு வர சொன்னா போலாமா" என்றதற்கு கரன் "டேய் அவங்களுக்கு எங்களலாம் வாயால கூப்பிட முடியாதா? என்ன நீ அவங்களுக்கு PA வா" எனக் கேட்க, கோபு "டேய் நாம பண்றதுக்கெல்லாம் இவ்ளோ மரியாதை கிடைக்கறத நினச்சி சந்தோஷ படுடா.. சரி கதிர் வேற யாரெல்லாம் வராங்கடா" எனக் கேட்க, "கோபு அவர்களே கொஞ்சம் மூடிட்டு வறீங்களா.. நீ யார எதிர் பார்க்கறனு எனக்கு தெரியுண்டா." என உடனே அவன் வாயை மூடினான். 4.00 மணி முதல் நாங்கள் மூவரும் காத்துக் கொண்டிருந்தோம். லாவண்யா இதோ வரேன் என்று சொல்லிவிட்டு போனவள், 6.20 வரை ஆகியும் அவளின் நிழல் கூட அந்தப் பக்கம் தெரியவில்லை. "டேய் உன்ன நம்பி வந்தோம் பாருடா இப்போ private bus ல போவ வசிட்டேயாடா... சரி விடு இது உனக்கு இன்னொரு பாடம்." என கோபுவும் கரனும் bus stop நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் என் மௌனத்தோடு. மறுநாள் வகுப்பில் காலை லாவண்யாவின் கண்கள் வந்த உடனே என்னைத் தேட ஆரம்பித்தது எனக்கு சட்டென புரிந்தது. நான் வேண்டுமென்றே அவள் கண்களில் படாமல் மதியம் வரை மறைந்தோடினேன். ஆனால் மாலை எப்படியோ என்னைத் தேடி library இருக்கும் குட்டிச்சுவர் வந்து விட்டாள். "நீ வருவன்னு எனக்கு தெரியும். அதுவும் எப்படியும் ஒரு காரணத்தோடு வருவேன்னும் தெரியும்" என கோபமாக நான் கேட்க, "கதிர் நீ என் மேல கோபமா இருக்கேன்னு தெரியும் ஆனா நேத்து நான் வராதத ஞாயப்படுத்தப் போறதில்ல. என் roommates எல்லோரும் எனக்கு hostel ல cake வெட்டி என்ன வெளியவே விடல, உள்ளத சொல்லிட்டேன் அதுக்கப்பறம் நீ கேட்கறதும் கேட்காததும் உன் இஷ்டம்" என சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். என் கால்களும் அவள் பாதை நோக்கி ஓடியது அவள் பின்னே.
மீண்டும் நான் அவள் நட்பின் பாதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன்.
நாங்கள் எதிர்பார்த்தபடியே Symposium சிறப்பாக நிறைவுற்றது.
கல்லூரியில் அனைத்து நண்பர்களும் நல்லதொரு கம்பெனியில் வேலையை தக்க வைத்துக் கொண்ட நாட்கள் அவை. அனைவரும் வாழ்க்கையில் ஒரு படி மேலே போன நாட்கள். முடியவேக் கூடாதென எதர் பார்த்த கல்லூரியின் கடைசி நாட்கள் நெருங்கத் தொடங்கின. ஆம் இன்னும் நான்கு மாதத்தில் என் கனவு வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியும், நிஜ வாழ்க்கைக்கு ஒரு தொடர்புள்ளியும் போடப்போவதைப் புரிய ஆரம்பித்த நாட்கள்.
(தொடரும்)
அன்புடன்
கருணா