Wednesday, March 26, 2008

சுவடுகள் - VI

நண்பர்களின் ஆரவாரத்துடனும் கல்லூரி நாட்கள் செல்வதே தெரியாமல் இருந்த எனக்கு நாட்கள் வேகமாக ஓடுவதற்கு பதிலாக நகரத் தொடங்கியது லாவண்யாவின் பார்வை இல்லாமல். அனைவரும் தங்கள் project முடிவு செய்துவிட்டார்கள். எங்கள் மேலேயும் கொஞ்சம் அபார நம்பிக்கை வைத்து சகாதேவன் professor அவருடைய Ph.D work ல் எங்களுக்கு பங்களித்தார் அதையே project ஆக செய்ய சொல்லிவிட்டார். அவரிடம் project செய்வது எங்களுக்கும் கொஞ்சம் பெருமையாக இருந்தது ஏனெனில் அவரிடம் பேசுவதற்கே எங்கள் வகுப்பில் அனைவரும் யோசிப்பார்கள். அனைவருக்கும் project முடிவான பின்னே வகுப்பில் இருக்கும் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது அவரவர் project batchகளைப் பொறுத்து, என் மனதில் சிறை பூட்டப்பட்டது. லாவண்யா அதில் சற்று தூரம் செல்லத் தொடங்கினாள். எனக்கான பாதை நேர்க்கோட்டில் இல்லாதது போல் இருந்தது. நான் அதிகம் விரும்பிய lab அனைத்தும் வெறுமையை மட்டும் எனக்கு பரிசாக தந்தன. அவள் இருக்கும் காரணத்தால் என்று Lab வகுப்புகள் எப்போது வருமென்று ஆர்வமாய் எதிபார்த்திருந்த நாட்கள் எல்லாம் இன்று என்னைப் பார்த்து ஏளனமாக சிரிக்க ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டன.

ஆனால் கிடைக்கும் சிறு நேரத்திலாவது அவளிடம் பேச நினைத்துக் கொண்டிருந்தது மனது. நான் எதிர் பார்த்தது போல் ஒரு 10 நாள் கழித்து லாவண்யாவும் என்னிடம் வந்து "என்ன கதிர் முதல்ல போல பேசலனு கோச்சிக்காத சரியா, வேற batch போனதால உன்ன ஒழுங்கா கவனிக்கக் கூட முடியல, சரி உனக்கு எப்படி போகுது project... start பண்ணியாச்சா?" என அவள் கேட்டுக்கொண்டே போக எதையோ பறிகொடுத்தவன் போல அவள் வார்த்தைகளை ரொம்ப நாட்களுக்கு பிறகு கேட்கும் மகிழ்ச்சியில் நான் திளைத்துக் கொண்டிருந்தேன். "இல்ல ஏதும் strat பண்ணல, அப்படியே போய்ட்டு இருக்கு...பண்ணனும்..பார்ப்போம்" என்றேன். அவளுக்கு என் மேல் இருந்த எதோ ஒன்று குறையவில்லை என்று மனதில் கொஞ்சம் சந்தோசம் சாய்ந்தாடியது. ஆனால் அதை நிலையானது அல்ல என்று மட்டும் மனதில் கேள்விகள் புரண்டோடியது. அன்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்று தனிமையில் எதையோ எண்ணிக் கொண்டிருந்த வேளையிலே தொலைபேசி அலறியது "கதிர், நான் லாவண்யா பேசறேன் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன் என்ன சொல்ற, போன semester நீயும் என்ன எத்தனையோ தடவ கூப்பிட்ட ஆனா எனக்குத்தான் time ஒத்து வரல, நான் மட்டும் தனியா வரல ராதாவையும் கூட கூட்டிக்கிட்டு வரப்போறேன், அவ்ளோ தூரம் வரனும்தானே" என்று சொல்லி என்னை சற்று அந்தரத்தில் மிதக்க வைத்தால். எனக்கு அவள் என் வீட்டுக்கு வருகிறாள் என்று சொன்னதும் எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் உள்ளே நுழைந்த அம்மாவிடம் "மா நாளைக்கு காலைல என்ன சாப்பாடு" என்று கொஞ்சம் ஆர்வமாக கேட்டேன். "இட்லி சுடலாம்னு இருக்கேன் ஏன்டா?" என்றார்கள். "இல்லமா வேற எதாவது புதுசா செய்யலாமே" என்றேன். " சரி இடியாப்பம் செய்யட்டுமா ?" என்று சொன்ன போது அதுவும் கேரளத்து special ஆக இருந்ததால் உடனே அதையே செய்யுங்கள் என்று கூறிவிட்டேன். லாவண்யா வரும் விஷயத்தை அன்று கரன் மற்றும் கோபுவிடம் கூட சொல்ல முடியவில்லை.

காலையில் எல்லாம் தயார் ஆக இருக்க, அவள் மட்டும் காணவில்லை. மணி 10.30 ஆனது எங்கே எனக்கு ஏமாற்றத்தை தரப் போகிறாள் என்று வீட்டு வாசலில் எட்டிப் பார்த்த எனக்கு ஒரு குட்டி தேவதை என் வீதியிலே வருவது போல் தெரிந்தது. ஆம் லாவண்யா வருகையால் என் வீதியும் விழிப்படைந்து. உள்ளுக்குள்ளே ஒரு நடுக்கத்துடன் வார்த்தையில்லாமல் அவளை வரவேற்று அனைவருக்கும் அறிமுகம் செய்துவிட்டு அவள் அமர்ந்த இடத்துக்கு எதிரே அமர்ந்து உணவருந்தினேன். பின்னர் சுமார் ஒரு அறை மணி நேரம் பொழுதைக் கழித்துவிட்டு வேகமாக கிளம்பினாள். "சரி aunty நான் கிளம்பறேன், எங்க வீட்ல சாப்பிட்ட இடியாப்பம் மாதிரி செஞ்சிருந்தீங்க " என சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினாள். நான் ஆவென்று அவளையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை bus stop வரை வழி அனுப்பலாம் என்று செல்லும் வேளையில் ராதா "நான் இங்க கார்த்திய பார்க்க போறேன் லாவண்யா நீ போய்டு ஓகேவா" எனக் கூறி அங்கிருந்து கிளம்பி விட்டாள். லாவண்யா என்னிடம் தயக்கமாய் "கதிர் உனக்கு கஷ்டமில்லனா என்ன கொஞ்சம் மெயின் bus stop ல drop பண்ணிடரியா நான் அங்கேர்ந்து வேற bus பிடிச்சி போயிடறேன்" எனக் கூறினாள். உடனே அவளை என் நண்பனிடம் வாங்கி வந்த scooty ல் உட்கார வைத்துக் கொண்டு நகர்ந்தேன். ஒரு புதுவித பயம் கலந்த அனுபவம்.

வழியில் ஏதோ அவள் தொன தொனவென பேசிக் கொண்டிருக்க அவள் வார்த்தைகளை செல்லமாய் காதுகளில் வாங்கிக் கொண்டிருந்தேன். அந்த bus stop நான் எதிர் பார்த்ததைவிட சீக்கிரம் வந்தது அப்போது " கதிர் எதாவது உனக்கு urgent வேலையிருக்கா?" என்றாள். "இல்லையே என்ன சொல்லு என்ன செய்யணும்" எனக் கூறினேன். "நீ busy இல்லனா என்ன Richy Richக்கு கூப்டுகிட்டு போறியா? சும்மா உன்கூட first time வெளிய வரேன் அதான்" என்று சொல்லி முடித்த அடுத்த வினாடியில் scooty Richy Rich ice cream shop நோக்கி நகர ஆரம்பித்தது. ஒரு மெல்லிய வெளிச்சத்தில் அவள் அருகே நான் அமர்ந்திருக்க இசை எங்கேயோ கேட்பது போல் இசைத்துக் கொண்டிருந்தது என் காதுகளுக்கு மட்டும். " இந்தா கதிர் உனக்கு புடிச்சது சொல்லு அதையே இன்னிக்கு நானும் சாப்பிடறேன் சரியா" என்றவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் ஏதோ ஒன்றை சொன்னேன். அது வரும் நேரத்திற்குள் கொஞ்சம் வார்த்தைகள் பரிமாறப்பட்டது. இத்தனை முறை நண்பர்களுடன் சென்ற அந்த இடத்திற்கு இப்போது லாவண்யா உடன் சென்றது புதுமையாக இருந்தது. வந்த ice cream ஐ நான் பேச்சு வாக்கிலே வேகமாக சாப்பிட்டு முடித்து அவள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தேன்.

லாவண்யா குறுக்கிட்டு "என்ன வந்த வேலை முடிஞ்சுதா, order பண்ண, கட கடன்னு சாப்ட, இதுக்கா உன்ன இங்க கூப்டுகிட்டு வந்தேன். கொஞ்சம் பொறுமையா பேசிகிட்டே சாப்டா நல்லா இருந்திருக்கும்ல உன்கிட்ட college ல பேச முடியல அதனாலத்தான் இங்க வந்த ஆனால் நீ" என என்னைப் பார்த்து நகைத்தாள். கொஞ்சம் பொறுமையா சாப்பிட்டு இருக்கலாம் என்று அப்பறம் தோன்றியது. சற்று நேரத்தில் "கதிர் நான் கிளம்பறேன் என்ன bus stop ல விட்டுடு வா போலாம் மணி ஆகுது" என அவசரப் படுத்த, நான் "லாவண்யா இப்போ நான் ஒன்னு சொல்றேன், மணி 1 ஆகுது இந்த time ல பஸ் அதிகமா இங்கேர்ந்து இருக்காது அதுவுமில்லாம உன்ன தனியா அனுப்ப எனக்கு மனசு இல்ல அதனால நானே உன்ன college ல drop பண்ணிடறேன்" எனக் கூறி முடிப்பதற்குள் அவள் வண்டியில் அமர, பயணம் கல்லூரியில் முடிந்தது. "கதிர் I had a nice time today ரொம்ப thanks மறக்க மாட்டேன்" என சொல்லி hostel நோக்கி நடந்தாள். வரும் வழியில் ஒரு ஆயிரம் பட்டாம் பூச்சிகளுடன் பறந்து வந்தேன்.

வகுப்பில் ஆசிரியர் இல்லா நேரம் பார்த்து அனைவரும் அரட்டையில் இருக்க இதை என் நண்பர்களிடம் சொல்ல "கோபு இவ்ளோ நடந்திருக்கு இந்த பையன் எதையும் சொல்லல பார்த்தியாட, அந்த பொண்ணு வந்தா நம்மள கழட்டி விட்டுடறான் பாரு இவன் சரியில்லடா" என கரன் பின்னால் அமர்ந்திருந்த கோபுவிடம் கூற கோபு எதையும் காதில் வாங்காமல் வேறு எதோ ஒரு சிந்தனையில் பெண்கள் பக்கம் இருக்கும் இளவரசியை கண்களால் கைது செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான். "டேய் டேய் போதுண்டா site அடிச்சது அங்கேர்ந்துதான் ஒண்ணும் reaction இல்லதானே அப்பறம் என்ன வெறுமனே லுக் சொல்லு. இந்த பையன் செஞ்சத சொன்னேன் கேட்டியா" என கரன் கூற,
"என்னடா சொன்ன, என்ன நம்ம பையன் இவ்ளோ அமைதியா இருக்கான்... ஏன்டா தனியா இருக்க ஏன் அவங்க இப்போ free யா இல்லையா, என்ன பன்றதுடா ஒரே batch ல இவ்ளோ நாள் சந்தோசமா இருந்தான் இப்போ போய் லவ் தூக்கி sorry லாவன்யாவ தூக்கி வேற batch போட்டதால பையனுக்கு ஒரே கஷ்டம் யாரோட வயித்தேரிச்சலோ தெரியலா ஆனா இதுல சிலருக்கு சந்தோசம்தான்" என கோபு என்னை ஓட்டினான். நடந்ததை எல்லாம் கரன் மீண்டும் கூற, கோபு "டேய் மச்சான் ஒரு நாளாவது எங்களுக்கு இடியாப்பம் உங்க வீட்ல செஞ்சி கொடுத்திருக்கியாட ஆனா அவளுக்கு மட்டும், இதெல்லாம் நல்லதுக்கு இல்லடா. கரன் இவன் கொஞ்சம் கொஞ்சமா மலையாலீயா மாறிட்டு வரான் நீ வேணும்னா பாரு இன்னும் கொஞ்ச நாள்ல இவன் கதகளி,மம்மூட்டி, அம்மே, அச்சன்,மலபார் னு சுத்திட்டு இருக்க போறான்" என அடுக்கினான் என்னைப் பற்றி சரியாய். "சும்மா இருடா இப்பவாது அவன் ஒழுங்கா இருக்கட்டும்" என கரன் கூறி முடிக்கும் முன்னர் வகுப்பறைக்கு HOD நுழைந்தார், அது அவரின் வகுப்பு. "Dear students we have to organize the Technical Symposium by next month end so plan and share your ideas, கரன் நான் உன்ன இதுக்கு responsibility எடுத்துக்க சொல்றேன் கூடவே 2nd & 3rd years help வேணும்னாலும் வாங்கிக்கோ" என அவர் கூறினார்.


இதைப்பற்றி பேசிக் கொண்டே வெளி வரும்போது அன்று Notice Board ல் அடுத்த வாரம் ஒரு company campus கு வருவதாக ஒட்டியிருந்தது. இது கொஞ்சம் computer software company அதனால் எங்கள் வகுப்பில் எவருக்கும் விருப்பமில்லாமல் இன்னுமொரு company ஆக நினைத்தார்கள். ஆம் அதில் கடைசிவரை சென்றது இருவர், தட்சணாமூர்த்தி மற்றும் மணி. ஆனால் இருவரும் நாங்கள் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்யாமல் வெளியேறினார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அப்போது எவருக்கும் பெரிய கவலை இல்லை. அடுத்து சில வாரம் கழித்து வந்த Ashok Leyland கம்பெனியில் தட்சணாமூர்த்தி தன் பெயரை பதித்துக் கொண்டான். நான் மீண்டும் முதல் சுற்றிலே வெளியே எரியப்பட்டேன். இதைப் பற்றி எதையும் கவலைப்படா ஒரு கூட்டத்தில் ஒருவன் என்னைப் பார்த்து "டேய் நீ இன்னும் எத்தனை கம்பனிதாண்டா போய் போய் வருவ இந்த கம்பெனியோட Hat trick அடிச்சிட்ட வாழ்த்துக்கள்டா கதிர்" எனக் கூற கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும் முன்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் மனதில் ஆழமாய் பதிந்தது. அவனை எதிர்த்து பேசமால் வந்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. ஆம் அவன் லாவண்யாவின் ப்ராஜெக்ட் batch.

மனதில் சந்தோசத்தின் சதவிகிதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது போல் உணரத் தொடங்கினேன்..

(தொடரும்)


அன்புடன்
கருணா

3 comments:

Hariks said...

Nice narration. But I dunno that you had this in our college. Who is lavanya da?

கருணா said...

Muruganandham..
Thanks for all ur commnets.

Lavnaya - she is my heroine in this Suvadugal :-)

Prawintulsi said...

karunaa...

Sirappu... Bore adikkaama nalla flow-vaa eludhareenga....

//அந்த bus stop நான் எதிர் பார்த்ததைவிட சீக்கிரம் வந்தது அப்போது// madiri sila... punchesum good