Tuesday, January 01, 2008

சுவடுகள் - IV

விடுமுறை நாட்களை ஓடத்தில் கடலைக் கடந்தவன் போல மெதுவாய் கடந்துவிட்டேன்.
6 வது செமஸ்டர், நானும் மனதில் பல எண்ணங்களுடனும் எதிர்பார்புகளுடனும் தொடங்கினேன். இதோ இன்று ஒரு புதியவளை உங்களுக்கு அறிமுகப்படுத்த போகிறேன் "கீதா". இவளும் எங்கள் வகுப்புதான், எங்களுடன் இருக்கும் 18 பெண்களில் அழகு கொஞ்சம் அதிகமாகவே இவளிடம் கொட்டி கிடந்தது. ஆனால் எப்போதும் தலை நிமிராமல் அவ்வளவு அடக்கமாக செல்வாள். அவளிடம் இதுவரை மூன்று பேர் தன் காதலை சொல்லி தடுக்கி வீழ்ந்திருக்கிறார்கள், அதுவும் எங்கள் department அல்லாதவர்கள். எங்கள் வகுப்பை சேர்ந்த தருண் என்றவனுடன் மட்டும் பேசி கொண்டிருப்பாள், அவன் அவளின் குடும்ப நண்பன் என்பதால். இவள் கதாபாத்திரத்தின் முக்கியம் என்னவென்றால், கீதா மீது கரனுக்கு ஒரு சிறிய கண். நாங்களும் அவனை அவளோடு இணைத்து பேசும் போது
மறு வார்த்தை கூற மாட்டான், உள்ளுக்குள் மட்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதிப்பான். "டேய் மச்சான் கல்யாணம் பன்னா எப்படியும் Love பண்ணிதாண்டா கல்யாணம் பண்ணனும், அதுவும் கல்யாணம் பன்னா அந்த மாதிரி பொண்ணதான் கல்யாணம் பண்ணனும், என்ன தெய்வீகம் அவளுக்குள்ள, எல்லா பெண்களுமே அழகுதாண்டா ஆனால் அவள் அதுக்கும் கொஞ்சம் மேலடா" இது அடிக்கடி அவன் அவளைப் பற்றி கூறும் வார்த்தைகள். நாங்களும் எப்போதும் அவனை ஒட்டிக் கொண்டே இருப்போம்.
"ஏன்டா இவ்ளோ பேசற எங்கள எல்லாம் ஓட்ற ஆனா போய் டக்குனு உன் காதல சொல்ல வேண்டியதுதானே" என்றான் கோபு.
"டேய் Love சொல்றதுக்கும் கொஞ்சம் யோசிக்கனும்டா, நாம சொல்றதுல அந்த பொண்ணு எந்த எதிர் பேச்சும் பேசாம அப்படியே நம்ம வார்த்தைல விழணும், சும்மா நானும் சொல்றேன்னு சொல்லக் கூடாதுடா, அதுக்கெல்லாம் எவ்ளோ கற்பனை வச்சிருக்கேன்" என்று முடித்தான். "சரி என்ன சொல்லப் போற, எப்படி சொல்லுவ". என்றேன் நான். "அப்படியே ஒரு 50 ரோஜா, நம்ம juniors கிட்ட கொடுத்து யார் கொடுக்கறதுன்னு அவளுக்கே தெரியாம கொடுக்கணும், அதுல கடைசி ரோஜா நான் கொடுத்து என் மனசுல அவள் இருக்கறத சொல்லனும்டா" என்றான் கரன். ஆம் கரன் மனதில் அவள் சற்று அதிகமாகவே ஆட்டம் போட்டு கொடிருந்தாள். அதை கொஞ்சம் வெளியே காட்டமாட்டான். ஆனால் நாங்கள் துருவி அதை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விடுவோம். அன்று ஒரு நாள் அவன் கூறிய வார்த்தைகள், என்றோ அவளிடம் சொல்வதற்காக "கீதா நான் யார கல்யாணம் பண்ணாலும் சந்தோசமா இருப்பேன், ஆனா நான் உன்ன கல்யாணம் பண்ணா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருப்பேன், உன்னோட முடிவுக்காக நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்திருப்பேன், உன் முடிவ நீ சொல்லு". இதை அவன் எங்களிடம் கூறும்போது எங்களுக்கு அவன் காதலை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று எண்ணினோம். இவன் காதல் எங்கள் மூவரைத் தவிர வெளியே யாருக்கும் தெரியாது. எங்களுக்கு மட்டும் ஒரு அபார நம்பிக்கை இருந்தது கரன் போய் அவன் காதலை அவளிடம் கூறினால் கண்டிப்பாக அவள் ஏற்று கொள்வாள். அந்த நாட்களுக்காக நாங்களும் காத்துக் கொண்டிருந்தோம்.

கல்லூரி திறந்து இரண்டு வாரம் சென்றும் லாவண்யா என்னிடம் பேசவில்லை. இந்த ஆண்டு எந்த labல் அவள் என்னோடு சேர்ந்து செய்ய போகிறாள் என்று யோசித்துக் கொண்டே இருப்பேன். Measurements lab னு ஒரு lab, இதில் மொத்தம் 5 பேர் ஒரு batch கு. அதில் மீண்டும் என்னோடு அவள். நான்,அவள்,கரன்,கார்த்தி மற்றும் லக்ஷ்மணன். மனதில் ஒரு மெல்லிய சந்தோசம். இந்த lab ல் எந்த சந்தேகமாக இருந்தாலும் அவள் என்னிடம் மட்டும் கேட்பாள்.


அப்படியே வாழ்க்கை போய் கொண்டிருந்தது. எங்கள் பேச்சும் தொடர்ந்தது. எப்படா free period கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருந்த நாட்களும் பல உண்டு, அவளிடம் சற்று நேர பேசலாமே என்பதற்காக. ஒரு நாள் Manufacturing Engg. lab முடித்துவிட்டு திரும்பும் வேளையில், கரன் "டேய் நான் அந்த லாவண்யா பொண்ண கொஞ்ச சத்தமா பேசிட்டேன், ஏதோ பேசிகிட்டு இருக்கறப்போ கொஞ்சம் திட்டிட்டேன் ஆனால் என் மேல எந்த தப்பும் இல்லடா அவ்ளோதாண்டா" என கூறினான். அவள் கண்ணீருடன் என்னருகே வந்தால். நான் என்ன காரணம் என்று விசாரிக்கும் முன்னரே கரன் அவளிடம் சென்று " இங்க பாரு லாவண்யா நான் உன்ன கஷ்ட பண்ணனும் திட்ல அப்படி hurt பன்னிருந்த I am sorry அவ்ளோதான்" என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான். நான் இருவருக்கும் இடையே நின்று கொண்டு, அவளை முதலில் சமாதானம் செய்துவிட்டு வேகமாக கரன் பின்னே ஓடினேன். "டேய் உன்னோட முகத்துக்காகதண்டா நான் sorry கேட்டதே, அவன் ஏன்டா தேவை இல்லாம என்ன பத்தி முன்னால ஒன்னு சொல்லணும் அப்பறம் பின்னால போய் வேற மாதிரி பேசணும் அது எனக்கு பிடிக்கல திட்டிட்டேன், நான் பண்ணது தப்பில்ல அவ்ளோதான்" நான் அவனிடம் என்ன காரணம் என்று கேட்காமலே கூறினான். அதன் பிறகு அவள் கரனை கண்டால் சற்று பயத்தோடுதான் பேசுவாள். "என்ன உன் friend கு அவ்வளோ கோபம் வருது, நான் ஏதோ தெரியாம பேசிட்டேன் அதுக்காக என் என்ன திட்டனும் சொல்லு" என்றாள். ஆனால் அதை பற்றி எனக்கு கேட்க விருப்பமில்லாததால் அதை அவளிடம் விசாரிக்க என் மனம் போகவில்லை. அவளும் என்னிடம் அவனைப் பற்றி தவறாக எதுவும் கூறமாட்டாள். அவர்களை சமாதானப்படுத்தி இருவரையும் என் வழிக்கு கொண்டு வருவதற்குள் நான் மிகவும் கஷ்டப் பட்டுவிட்டேன்.

கரன் அடிக்கடி என்னிடம் கூறுவான் "டேய் நாம மூணு பேரும் எப்பவும் ஒண்ணா இருக்கணும்டா, இதுல ஒரு பொண்ணு வந்து நமக்குள் எந்த மன கஷ்டமும் வரக்ககூடாது". கரனுக்கு அவள் மீது கொஞ்சம் சந்தேகம் எப்பவும் இருந்து கொண்டே இருந்தது, அதற்கு நான் எந்த விதத்தில் ஏமாற்றத்தை கண்டுவிடக்கூடாது என்ற ஒரு காரணமும் உண்டு.

அதுவரை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. எனக்கும் அவளுக்கும் உள்ள உறவு என்ன என்றே எனக்கே தெரியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கு உலகம் சொன்ன பெயர்கள் பல.. நட்பு,காதல்,கடலை என நீண்டது. ஆனால் என் மனதிற்கும் அது என்னவென்று தெயயவில்லை. அவள் நம்மிடம் பேசினால் மட்டும் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்படியே நாட்களை தள்ளிக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் கரன் என்னிடம் வந்து "மச்சான் நான் ஒன்னு கேள்வி பட்டேண்டா, பசங்களும் அப்படித்தான் சொல்ராங்கடா, லாவண்யா..லாவண்யா வந்து நம்ம class சந்தோஷ் அவன லவ் பண்ராலாம், ஆனா இது எதுவுமே நமக்கு வெளிய தெரிய மாட்டேங்குது, அப்பறம் என் அவன் உன்கிட்ட இப்படி பேசறானு தெயயல" எனக் கூறி என் மனதை சற்றே கலக்கத்தில் கரையவிட்டான். அது வரை என்ன உறவு என்று மனம் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் அவள் மற்றொருவனுக்கு சொந்தமாக போகிறாள் எனத் தெரிந்ததும் மனம் குழப்பத்தில் ததும்பியது."மச்சான் நான் இத உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன், அப்பறம் நாமளும் மனசுல ரொம்ப ஆசைய வளத்துக்க கூடாதுல அதுக்குதாண்டா" என கோபுவும் கூடவே கூற நான் குறுக்கிட்டு "இல்லடா அவள் என்கிட்டே எதுவா இருந்தாலும் சொல்வாடா, ஆனால் அவங்க ரெண்டு பேரும் பேசி நாம பார்த்ததே இல்லையே". "ஆமாண்டா நாங்களும்தாண்டா பார்த்ததில்ல, அவங்க ரெண்டு பேரும் college முடிஞ்சதுக்கு அப்பறம்தான் பேச ஆரம்பிபாங்களாம், அப்பறம் every weekend பார்த்து பேசுவாங்களாம், hostel பசங்க சொல்றாங்க, நாமதான் correct time கு இங்கேர்ந்து கிளம்பிடறோம், அதான் நமக்கும் ஒண்ணும் தெரியறது இல்ல" என கோபு கூறினான். எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை, இதை பற்றி அவளிடம் கேட்கவும் தைரியமில்லை.

அதற்குப் பிறகும் அவள் என்னுடன் எப்போதும் பேசுவதையும் நிறுத்தவில்லை. அன்று வேண்டுமென்றே நான் கல்லூரி முடிந்த பிறகும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன். அன்றுதான் முதன் முதலாக அவர்கள் இருவரும் பேசுவதை நான் கண்டேன். இதை நான் நண்பர்களிடமும் கூறினேன். "டேய் எனக்கு அப்பவே தெரியும்டா, இந்த மாதிரி அழுது காரியத்த சாதிக்கற பொண்ணுங்களை நம்பக் கூடாது" என மிக கோபமாக கூறினான் கரன். "நீ பேச வேணாம்னு சொல்லல, அது இதுக்கப்பறம் நாம நம்ம limit பார்த்து நடந்துக்கணும், அவளுக்காக எவ்வளவோ நீ செஞ்சிட்ட அவ்ளோதாண்ட நான் சொல்வேன்." என்று கோபுவும் கூற நான் அவர்கள் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதை உணர்ந்தேன்.
ஆனால் அவளிடம் திடீரென பேசுவதை நிறுத்துவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
ஏனென்றால் என் மனம் நான் சொல்வதை கேட்கும் நிலையில் அப்போது இல்லை. அவளும் என்னிடம் எப்போதும் போல் பேசுவாள்.
என்னிடம் எந்த சந்தோசத்துடன் பேசுவாளோ அதே சந்தோசம் மகிழ்ச்சி அவனிடம் பேசும்போதும். நான் அதை சற்றும் கவனிக்காமல் அப்படியே என் பாதை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். மறு நாள் அவள் என்னிடம் இதை சற்றும் காட்டிக் கொள்ளாமல் என்னிடம் எப்போது போல பேசி கொண்டிருந்தாள். அவளின் அந்த காதல் அத்தியாயத்துக்குள் நானும் தலையிட விரும்பவில்லை.


அவள் எப்போதும் என்னிடம் சொல்ல நினைக்கிறாளோ அன்று சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் கரனுக்கும், கோபுவுக்கும் அவள் ஏன் இப்படி என்னிடம் சொல்லாமல் எல்லாம் செய்கிறாள் என்ற கோபம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. என்னுடன் என்னதான் மணிக்கணக்கில் பேசினாலும் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் சந்தோஷ் அவன் வேலையை பார்த்துக் கொண்டிருப்பான். லாவண்யாவும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது என் நட்பை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அது நட்பு என்று நான் எனக்குள்ளே உறுதிப் படுத்திக் கொண்டேன். அதை நான் நட்பு என்று எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கும் ஒரு படி மேலாக நினைத்து நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். இப்படியே நாட்கள் செல்ல செல்ல என்ன நடக்கிறது என்று எனக்கே தெரியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. அவள் ஏன் நம்மிடம் அவனைப் பற்றி பேச மறுக்கிறாள் என்ற கேள்வியையும் நான் எனக்குள்ளே பல முறை கேட்டும் என் மனது அவளிடம் பேசுவதை நிறுத்தவில்லை. 6 வது semester முடியும் தருவாயில் எங்களை final year project செய்வதற்கு இப்போதே batch பிரிக்க சொன்னார்கள். நாங்கள் ப்ராஜெக்ட் தேடும் ஆர்வத்தில் இருந்தபோதும் எனக்கும் உள்ளுக்குள்ளே அவர்களைப் பற்றித்தான் உள் மனதில் சிந்தனை வெள்ளோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.
லாவண்யா என் நட்புக்கும் சந்தோஷின் காதலுக்கும் இடையில் நாட்களை கரைத்துக் கொண்டிருந்தாள்.


இதன் பிறகு என் நிலை என்ன?
நான் எப்படி இருக்க வேண்டும் என்று என் மனம் சற்றும் யோசிக்கவில்லை. ஆனால் அவளிடம் மட்டும் பேச வேண்டும். அதை மட்டும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.



அன்புடன்
கருணா

3 comments:

Unknown said...

ungal kalroori vazhvil payanitha oru unarvu...migavum nerthiyana rasikumpadiyana ezuthukkal.Enadhu mudhal parattu,un thanthai perumaipadum padi nee palli padipil serentha manavanaga thigazthandhukaga(suvadukal-1).unadhu karan matrum gopuvin arimugamum inimaye!!!unadhu ezthukal ungaladhu sirantha natpai sirapaga pradhiblikinrana...I wish your friendship with ur friends should long last throughout your life as you though in ur mind after u met karan!!!

After going through these I too felt that I have been in ur college virtually!!

unadhu kavidhai mattum alla...unadhu suvadugalam..kavithuvamagave irundhadhu...


suvadugal - v ( indhavadhu suvadai epozhudhu edhirpakalam????

கருணா said...

மிக்க நன்றி சங்கர்....
பாராட்டையும் அன்பையும் பொழிந்து விட்டீர்கள்...

Anonymous said...

Good words.